fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சர்வேதச போட்டிகளே ஆடாத இந்தியரை பேட்டிங் கோச்சாக நியமித்த தென் ஆப்பிரிக்கா. யார் தெரியுமா அவர் ?

Sports | விளையாட்டு

சர்வேதச போட்டிகளே ஆடாத இந்தியரை பேட்டிங் கோச்சாக நியமித்த தென் ஆப்பிரிக்கா. யார் தெரியுமா அவர் ?

தென்னாபிரிக்க அணி இந்திய சுற்றுப்பயணம் வருகிறார்கள். முதலில் மூன்று டி 20 பின்னர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடுகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர்கள் ஆடும் முதல் தொடர் இது தான். அக்டோபர் மாதத்தில் டெஸ்ட் மேட்சுகள் விசாகப்பட்டினம், புனே மற்றும் ராஞ்சியில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் இடைக்காலத்தில் செயல் பட மும்பை முன்னாள் கிரிக்கெட் வீரரான 44 வயது அமோல் மஜும்தார் அவர்களை பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளனர்.

Amol Mujumdar appointed as batting coach of SA

அமோல் மஜும்தார் – 20 வருடங்கள் முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளார். மும்பை, அசாம் மற்றும் ஆந்திர பிரதேச அணிகளுக்காக; 171 போட்டிகளில் 11167 ரன்கள் 48.13 சராசரியில் அடித்தவர். 30 சதம் அடித்தவர். அதிகபட்ச ரன் 260 ஆகும். இவர் 8 முறை ரஞ்சி கோப்பை வென்றுள்ளார், அதில் ஒருமுறை கேப்டன் கூட.

மும்பையில் சச்சினின் ஸ்கூல் மேட் மஜும்தார். சச்சினின் ஆர்சேக்கர் சார் தான் இவரின் கோச்சும். பள்ளி கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் வினோத் காம்ப்லி 664 ரன் குவித்த பொழுது அடுத்து பேட்டிங் இறங்க ரெடியாக இருந்தது இவர் தான்.

சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமண் என அந்த நாலாவரும் ஆதிக்க செலுத்திய காலத்தில் இவரது கிரிக்கெட் கேரியர் அமைந்ததாலோ என்னவோ சர்வ்தேச போட்டிகள் ஆட முடியாமல் போனது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என கோச்சிங் தேர்ச்சி சான்றிதழ் வைத்துள்ளார். இந்தியா யூ 19, யூ 23 போன்ற டீம்காலை கோச் செய்துள்ளார். சில நாட்கள் நெதர்லாண்ட்ஸ் டீமின் பேட்டிங் பயிற்சி தந்தார். மேலும் ஐபில் இல் ராஜஸ்தான் ராயல்ஸ் டீம்மின் பேட்டிங் பயிற்சியாளரும் இவர் தான். கிரிக்கெட் வர்ணனையும் செய்து வருகிறார். சமீபத்தில் இந்திய டீம்மின் பேட்டிங் பயிற்சியாளர் ரோலுக்கு விண்ணப்பித்தார், ஆனால் கிடைக்கவில்லை.

வாழ்த்துக்கள் நண்பா.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top