Sports | விளையாட்டு
சொன்னதை செய்த கடப்பாரை அணி.. டெல்லியை வீழ்த்தி, ஐந்தாவது முறை சாம்பியன் பட்டத்தை வென்றது!
ஐபிஎல் 13-வது சீசன் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான மார்கஸ் ஸ்டோய்னிஸ் (0), தவன் (15), ரகானே (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினர் எனினும் கடைசி கட்டத்தில் டெல்லி அணியால் 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, ஷ்ரேயாஸ் அய்யர் 65, ரிஷ்ப் பண்ட் 56 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மும்பை அணி 18.4 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. ரோகித் சர்மா 36 பந்துகளில் அரை சதம் அடித்தார்.19 பந்துகளில் 33 ரன்கள் அடித்த இஷான் கிஷான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியது.

ipl-mumbai-delhi
