ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மும்பை அணி, பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் ஐதராபாத்தில் நடக்கும் 48வது லீக் போட்டியில், மும்பை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஐதராபாத் அணியில், சிராஜ்க்கு பதில் நெஹ்ராவும், வில்லியம்சனுக்கு பதில் முகமது நபியும் இடம் பெற்றனர். மொத்தம் மூன்று மாற்றங்கள் என சொன்ன வார்னர். மூன்றாவது வீரரின் பெயரை மறந்துவிட்டதாக காமெடியாக தெரிவித்தார்.