Tamil Cinema News | சினிமா செய்திகள்
கடுப்பில் இருக்கும் எனக்கு எதுக்கு ஆரஞ்சு தொப்பி.! விராட் கோலி
ரசிகர்கள் அனைவரும் IPL போட்டியில் மூழ்கிக்கிடக்கிறார்கள் நேற்று நடந்த IPL போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிக்கொண்டன இதில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தன, அடுத்ததாக களம் இறங்கிய பெங்களூர் அணி 8 விக்கட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
virat
ஆனாலும் இதுவரை நடந்த 4 போட்டிகளில் விராத் கோலி 201 ரன்கள் எடுத்துள்ளார், அதனால் IPL போட்டிகளில் அதிக ரன் குவிக்கும் வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அதனால் நேற்று ஆரஞ்சு தொப்பி அவரிடம் கொடுக்கப்பட்டது ஆனால் மும்பை இந்தியன் அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக விராத் கோலி கவலையில் இருந்தார்,
அதனால் தோல்வி நிலையில் இந்த ஆரஞ்சு தொப்பியை எனக்கு அணிய விருப்பம் இல்லை என கூறினார் மேலும் மும்பை இந்தியன் அணி சிறப்பாக பந்து வீசினார்கள், அதேபோல் அவர்கள் அச்சமின்றி விளையாட்டை வெளிபடுத்தினார்கள் , எங்கள் அணியும் முடிந்த வரை முயற்சி செய்தோம் ஆனால் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் எடுக்க முடியவில்லை என கூறினார்.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடைசி வரை நின்று போட்டியில் போராடி 92 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.