mumbai

மும்பை : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பீல்டிங் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு மெக்கல்லம் 64, தினேஷ் கார்த்திக் 48 ரன்கள் விளாச, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்தது.

பவுலிங் ஏமாற்றம்:
தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த மும்பை அணி, 2வது பந்திலேயே பார்திவ் படேலின் விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் இணைந்த ஜாஸ் பட்லர் 26, ராணா 36 பந்தில் 2 சிக்ஸர் 4 பவுண்டரிகள் அடித்து 53 ரன்கள் குவித்து அவுட்டானார்.

அதன் பின் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, போலார்டு இணை குஜராத் வீரர்களின் பவுலிங்கை துவம்சம் செய்தனர். போலார்டு 23 பந்தில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாசி 39 ரன்களை குவித்தார்.
அதே போல் கேப்டன் ரோகித் சர்மா 29 பந்தில், 40 ரன்கள் எடுத்து மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.