மும்பை இந்தியன்ஸ் அணிக்கு  எதிரான போட்டியில் புனே அணி 160 ரன்களை எடுத்துள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை  இந்தியன்ஸ் அணியும் புனே அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.

இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய புனே அணிக்கு தொடக்கம் கொடுத்த ரஹானே 32 பந்துகளில் 38, திரிபதி 31க்கு 45 ரன்களை குவித்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இவர்கள் இருவரும் கேவி சர்மாவின் சுழலில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அதிகம் படித்தவை:  டோணியின் ஹெலிகாப்டர் ஷாட்லாம் பாத்துட்டோம் இனி ஏரோபிளேன பார்க்கும் பிசிசிஐ

அடுத்தடுத்ததாக களமிறங்கிய ஸ்மித்(17),தோனி(7), ஸ்டோக்ஸ்(17), மனோஜ்  திவாரி(22) ரன்களும் எடுத்து வெளியேற 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த புனே அணி 160 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகம் படித்தவை:  பெங்களுருவில் இவர்களை சந்தித்தாரா கேப்டன் விராட் கோலி. வைரல் போட்டோ உள்ளே.

இதில் புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை தனது  சுழலில் அவுட்டாக்கிய ஹர்பஜன் சிங் ஐ.பி.எல் அரங்கில் தனது 200வது விக்கெட்டை  நிறைவு செய்தார்.