கொல்கத்தாவுக்கு எதிரான 2வது தகுதிப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றன. மும்பையில் நடந்த தகுதிச்சுற்றின் முதல் போட்டியில், புனே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடந்த எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் மோதின. இதில், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
பைனலில் யார்?

அதிகம் படித்தவை:  கூட்டணிக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்.! தவியாய் தவிக்கும் மகத், தடுமாறும் யாஷிகா, குழப்பத்தில் ஐஸ்வர்யா.! ப்ரோமோ வீடியோ

இந்நிலையில், இன்று நடக்கும் 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் கூறுகையில், சேஸிங் தான் பெங்களூரில் நல்லது. இது அரையிறுதிப் போட்டி என்பதால், கவனமாக விளையாடுவோம் என்று நம்புகிறேன். காயமடைந்த மெக்லேனகனுக்குப் பதிலாக ஜான்சன் அணியில் இடம்பெற்றுள்ளார் என்று ரோகித் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  மனைவியின் வியாபாரத்திற்காக பெண் வேடமிட்ட பிரபல நடிகர்.!

இதன் பிறகு பேசிய கம்பிர் கூறுகையில், நாங்களும் சேஸிங் செய்ய விரும்பினோ. ஆனால், டாஸில் தோல்வியடைந்துவிட்டோம். பேட்டிங்கில் கில்லாடியாக விளையாடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும். இதில், அணியில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளோம். யூசுப் பதானுக்குப் பதிலாக அங்கீத் ராபுத் மற்றும் பவுல்ட்டுக்குப் பதிலாக கொலின் டி கிராண்ட் ஹோம் அணியில் இடம் பெற்றுள்ளனர் என்று கம்பிர் தெரிவித்துள்ளார்.