இந்தியாவில் பாலின பங்கு, பொருளாதார வளர்ச்சி, போக்குவரத்து அணுக்கல், பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, கவனம் மற்றும் பாதுகாப்பு, சூழ்நிலை பாதிப்பு, அடிப்படை வசதி ஆகியவற்றின் அடிப்படையில் ஐஐடி பம்பாயின் நகர்ப்புற வாழ்க்கை குறியீட்டை வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியான ஐஐடி பம்பாய் ஆய்வறிக்கையின் முடிவின்படி, ‘பெண்கள் நட்பு மிகுந்த நகரமாக சென்னை விளங்குகிறது’ என்ற பெருமையை இந்திய அளவில் தமிழ்நாட்டின் சென்னை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பாலின பங்கு என்ற தரவரிசையில் ‘சென்னை’ முதலிடத்திலும் ‘பாட்னா’ கடைசி இடத்திலும் உள்ளது.
அதேபோன்று பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் ‘மும்பை’ முதலிடத்திலும் ‘பாட்னா’ கடைசி இடத்தையும் வகுத்துள்ளது. மேலும் போக்குவரத்து அணுக்களில் ‘டெல்லி’ முதலிடத்திலும் ‘இந்தூர்’ கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
அதேபோல் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முதலிடத்தில் ‘கொல்கத்தாவும்’, கடைசி இடத்தை ‘பாட்னாவும்’ பிடித்துள்ளது.


மேலும் கவனம் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் ‘கொல்கத்தாவும்’ கடைசி இடத்தில் ‘பாட்னாவும்’ உள்ளது.
அதேபோன்று சூழ்நிலை பாதிப்பின் படி இந்தியாவில் முதல் இடத்தை ‘மும்பையும்’ கடைசி இடத்தை ‘லக்னோவும்’ பிடித்துள்ளது. இந்தியாவில் அடிப்படை வசதியை பொறுத்தவரை ‘புனே’, முதல் இடத்தையும் ‘பாட்னா’ கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.
எனவே பம்பாய் ஐஐடியின் ஆய்வறிக்கையின் முடிவுகளில் டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய மூன்று நகரங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு முன்னிலை வகித்த சிறந்த நகரங்களாகும்.