fbpx
Connect with us

இந்தியா, பாகிஸ்தான் போல வெறித்தனமாக மோதிக்கொண்ட ஐபிஎல் போட்டி.! விரலை நீட்டி வெறுப்பேற்றிய ஹர்திக் பாண்டியா

Sports | விளையாட்டு

இந்தியா, பாகிஸ்தான் போல வெறித்தனமாக மோதிக்கொண்ட ஐபிஎல் போட்டி.! விரலை நீட்டி வெறுப்பேற்றிய ஹர்திக் பாண்டியா

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இரு அணி வீரர்களும் களத்தில் ஆக்ரோஷமாக காணப்பட்டனர் .நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பலரும் பெங்களூர் அணி மீதும், கோலி மீதும் கோபமாக இருந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்று விவரம் வெளியாகி உள்ளது.

நேற்றைய ஆட்டம் விறுவிறுப்பாக சென்றதற்கு காரணம்  பெரிய  ஸ்கோரோ அல்லது அதிரடி சேசிங்கோ  கிடையாது .இரு அணி வீரர்களும் களத்தில்  ஸ்லெட்ஜிங் முறைப்படி மோதி கொண்டதே காரணம்.

விராட் கோலி ,ஏபிடி களத்தில் இருக்கும் பொழுது  பொல்லார்டூ உள்ளிட்ட வீரர்கள் லேசான ஸ்லெட்ஜிங்கை தொடங்கினார்கள்.அதன்பின் மும்பை பேட்டிங்கின் போதுதான் ஸ்லெட்ஜிங் மோசமானது. அதாவது மும்பை பேட்ஸ்மேன்களை வரிசையாக கோலி சீண்டினார்.

விராட் கோலி ஒவ்வொரு விக்கெட்  விழும் பொழுதும் ஆக்ரோஷமாக கத்தினார் .மேலும்    சூர்யகுமார் யாதவ் அடிக்கும்   பந்துகளை தடுத்துவிட்டு  அவரை  ஸ்லெட்ஜிங் செய்தார். இதனால் இருவரும் களத்தில்  முறைத்துக் கொண்டனர்.

மறுபுறம் ஹர்திக் பாண்டியா மற்றும் கிரிஸ் மோரிஸ் மோதிக்கொண்டனர். கிறிஸ் மோரிஸ் போட்ட 19வது ஓவரில் பாண்டியா சிக்ஸ் அடித்துவிட்டு, அவரை நோக்கி விரலை காட்டினார். அதேபோல் அவரிடம் கோபமாக எதோ பேசினார். இதற்கு அடுத்த பந்தே ஹர்திக் பாண்டியா விக்கெட்டை எடுத்துவிட்டு மோரிஸ் கோபமாக பாண்டியவை திட்டினார், பெவிலியன் போங்க என்பது போல கத்தினார்.

இந்த ஸ்லெட்ஜிங் மற்றும் மோதலுக்கு பின்னால்  உள்ள முழு காரணம் தெரிய வந்துள்ளது. மும்பை அணியில்  உள்ள வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு  செய்யப்படாமலும், பெங்களூர் அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது தான் காரணம் என்கிறார்கள்.

இதனால் கோலி மீது தங்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தவே இப்படி மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். அணியில் வாய்ப்பு இல்லாத விரக்தியை வெற்றிக்கு பின்பும் மும்பை வீரர்கள் வெளிப்படுத்தினார்கள். அதை புரிந்து கொண்டதால்தான் கோலியும் பதிலுக்கு ஆக்ரோஷமாக செயல்பட்டார் என்கிறார்கள்.

Continue Reading
To Top