Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாட்ஷா மற்றும் குணா பட நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை.. இவங்க ரஜினி, கமல் ஜோடியாச்சே!
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் நடிப்பையும் தாண்டி பல நடிகைகளுக்கு டப்பிங் செய்துள்ளனர். அந்த வரிசையில் இந்த பிரபலத்திற்கு ஒரு முக்கிய இடமுண்டு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். ஆரம்ப காலத்தில் இவர்களுடன் நடிக்கும் நடிகைகள் அனைவருமே மற்ற மொழியை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு சரளமாக தமிழ் பேச தெரியாது என்பதால் அவர்களுடன் நடிக்கும் சக நடிகைகளே டப்பிங்கும் கொடுத்துள்ளனர்.
அந்த வரிசையில் ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா படத்தில் நடித்த நக்மாவிற்கும், அதேபோல் கமல் கமல் நடிப்பில் வெளியான குணா படத்தில் நடித்த ரோஷினிக்கும் பிரபல நடிகையான சரிதா தான் குரல் கொடுத்துள்ளார்.

saritha-cinemapettai
அதுமட்டுமில்லாமல் மன்னன் படத்தில் நடித்திருந்த விஜயசாந்திக்கும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்திருந்த நதியாவிற்கும், காதலன் மற்றும் லவ் பேர்ட்ஸ் படத்தில் நடித்திருந்த நக்மாவிற்கும் சரிதா தான் குரல் கொடுத்துள்ளார்.
இதுபோன்ற பல நடிகைகளுக்கும் பல படங்களில் சரிதா குரல் கொடுத்துள்ளார். சரிதா தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த நடிகைகளுக்கும் சரிதா குரல் கொடுத்துள்ளார்.
மேலும் ராதா, சரண்யா, ஷோபனா, ரோஷினி, ஸ்ரீதேவி, மதுபாலா, மீனா, ரம்யா கிருஷ்ணன், அமலா மற்றும் ரோஜா போன்ற நடிகைகளின் பேவரைட் டப்பிங் ஆர்டிஸ்ட் சரிதா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
