சீண்டி விட்ட சக்காளத்தி.. சரியான பிளான் போட்டு வலைவீசும் கதிர்

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக ஹோட்டல் தொழிலை துவங்கிய கதிர், தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை பெரிய அளவில் லாபம் கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் நஷ்டத்தில் வீதம் குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், கூடவே இருந்து கொண்டு கிண்டல் செய்து கொண்டிருக்கும் மல்லியின் வாயை அடைப்பதற்காக கதிர்-முல்லை இருவரும் எப்படி வாடிக்கையாளர்களை கடைக்கு வர வைப்பது என யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: வீட்டையே பார்லர் ஆக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்

அப்போது கதிர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாள் முழுவதும் இலவச உணவு அளித்தால் எப்படி! என்று யோசனை சொல்கிறார். அதற்கு முல்லை, அன்றைய தினம் மட்டும் எல்லா சாப்பாடும் தீர்ந்துவிடும். இதனால் நமக்கு பெரிய நஷ்டம்தான் ஏற்படும் என அந்த யோசனை நிராகரித்துவிட்டார்.

பிறகு குடும்பத் தலைவிகளுக்கு காலையில் டிபன், மதியம் சாப்பாடு என இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது தான் சிரமமாக இருக்கும். ஆகையால் நாம் காலையிலேயே கலவை சாதங்களை டிபனுடன் சேர்ந்த சமைத்துக் கொடுக்கலாம்.

Also Read: கதிருக்காக கெஞ்சும் அண்ணி

அப்படி செய்தால் நிச்சயம் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். இதன் மூலம் நமக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஹோட்டலில் லாபம் வர வாய்ப்பிருக்கிறது என்று முல்லை கதிரிடம் யோசனை சொல்கிறார்.

இந்த யோசனையும் சரியானதுதான் என்று நாளை முதல் கதரின் ஹோட்டலில் காலையில் டிபன் உடன் கலவை சாதத்தையும் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப் போகின்றனர். இதனால் கதிரின் ஹோட்டலில் லாபம் வருவதை பார்த்து மல்லி வாயடைத்துப்போய் மதுரைக்கு கிளம்ப போகிறார்.

Also Read: 90’s கதையை இப்ப உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்