Tamil Cinema News | சினிமா செய்திகள்
காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு வராமலா போய்விடும்.. VJ சித்ராவை நோக்கி படை எடுக்கும் தயாரிப்பாளர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற தொடர்களில் பாண்டியன் ஸ்டோர் தொடரும் ஒன்று.
இத்தொடரில் நடித்து வரும் நடிகர், நடிகைகளில் மக்களை அதிகம் கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா.
கொரோனாவினால், தற்போது தொடர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் முல்லை இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் இவரை பின் தொடரும் ரசிகர்கள் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்
சித்ராவிற்கு, சைக்கிள் செயின் சித்ரா என்ற பட்டப் பெயரும் உள்ளது. அதிலும் இணைய பக்கத்தில் இவர் அளித்துவரும் புடவை டிசைன்கள், ஹேர்ஸ்டைல், மேக்கப் அனைத்தும் அதிகம் ரசிக்கப்படுகிறது.
அவ்வப்போது சேலையிலும் மாடர்ன் உடைகளில் தொடர்ந்து புகைப்படம் வெளியிட்டு வந்த முல்லைக்கு பலன் கொடுக்கும் விதமாக பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதாம். வேறு சில படங்களிலும் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தற்போது சித்ராவை மொய்க்க தொடங்கியுள்ளனர்.
பழைய சோத்துக்கு காத்திருந்த ஆளுக்கு பிரியாணி கிடைத்ததைப் போல ரவுண்டு கட்டி அடிக்க களமிறங்கி விட்டாராம் முல்லை. இதனால் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு ஷிப்ட்டாக உள்ள மகிழ்ச்சியில் இருக்கிறாராம் சித்ரா.
