முகிலனை பார்க்க வந்த அவரது மனைவி வாகனம் விபத்து.. விடைதெரியாத மர்மம்

ஈரோட்டைச் சேர்ந்த முகிலன் தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் 4 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார். அப்போது அரசு வேலைகளில் நடக்கும் சீர்கேடுகளை பார்க்க முடியாமல் தனது அரசு வேலையில் இருந்து விலகினார்.

மேலும் இவர் சாயக்கழிவுநீர் போராட்டம், காவிரியில் மணல் அள்ளுவதற்கான போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு போராட்டம் மற்றும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போன்ற பல போராட்டங்களின் சமூக ஆர்வலராக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் நாள் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்ற முகிலன் திடீரென காணாமல் போனார். அதை எடுத்து பல பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தது மட்டுமின்றி பலரும் போராட்டம் நடத்தி வந்தனர்.

குறிப்பாக இளைஞர்கள் இவரைப் பற்றிய தகவல் ஏதாவது கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங் செய்தனர். அதனால் முகிலனை கண்டுபிடிக்க முடிந்தது. தற்போது முகிலனை பார்க்க வந்த இவரது மனைவி கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்பொழுது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment