Connect with us
Cinemapettai

Cinemapettai

mugan-rao-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் முகேன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. அனல் பறக்கும் இணையதளம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த சீசனில் கோப்பையை கைப்பற்றிய முகேன் ராவ் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக தன்னுடைய படத்தை பற்றி அப்டேட் ஏதும் கொடுக்காமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது முகேன் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் முகேன் மற்றும் அனுகீர்த்தி வால் நடிக்கும் புதிய படத்திற்கு வெற்றி என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் என்பவர் இயக்கவுள்ளார்.

biggboss-fame-mugan-rao-debut

biggboss-fame-mugen-rao-debut

க்ரைம் திரில்லர் கதையில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் உருவாகும் இந்த படத்திற்கு திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சியாளராக உள்ளார்.

biggboss-fame-mugan-rao-debut-01

biggboss-fame-mugen-rao-debut-01

ஒரு வருடத்திற்கு பிறகு முகேன் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளதால் அவருடைய ரசிகர்கள் இணையத்தில் பஸ்ட் லுக் போஸ்டரை பரப்பி வருகின்றனர்.

Continue Reading
To Top