Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல்வன் இரண்டாம் பாகம்.! ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.!
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து மிக பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் முதல்வன், இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் ஒருநாள் முதல்வராக நடித்திருப்பார், முதலில் அர்ஜுன் சாதாரண பத்திரிக்கையாளராக தான் இருப்பார், முதல்வரை பேட்டி எடுக்கும்போது சில கேள்விகளால் ஒருநாள் தமிழக முதல்வர் ஆக மாறுவது தான் படத்தின் கதை.

mudhalvan
இந்த படத்தில் அர்ஜுன் நடிப்பதற்கு முன்பு முதலில் விஜய் உட்பட பலரிடம் கால்ஷீட் கேட்டுள்ளார் ஷங்கர் அப்படிக் கேட்டு முடியாத பட்சத்தில் தான் கடைசியில் அர்ஜுன் நடித்தார்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது அனைவருக்கும் தெரியும் இதனால் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார்கள், தற்பொழுது ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்க தயாராகிவிட்டார் இந்த படத்தை முடித்ததும் முதல்வன் இரண்டாம் பாகத்தை தொடங்குவார் என்று தெரிகிறது.இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் நடிகை சுருதிஹாசன் முதல்வன் இரண்டாம் பாகத்தை எடுத்தால் கதாநாயகனாக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டுள்ளார் அதற்க்கு ஷங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் விரும்பினால் அவர்களை வைத்து எடுப்பேன் அவர்கள் முடியாது என்றால் அடுத்ததாக விஜய்யை தான் தேர்வு செய்வேன் என அதிரடி பதிலை கூறியுள்ளார்.
