விவேகம் திரைப்படத்தின் டீசர் அறிவித்தபடி நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளில் வெளியாகாததால் ரசிகர்கள் சிறிது ஏமாற்றத்தில் உள்ளனர்.

தல அஜித் குமார் நடிப்பில் உருவாகும் விவேகம் திரைப்படம் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள நிலையில் படத்தின் இரண்டாவது போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வமான போஸ்டர் இல்லை என்றபோதும் சில நிமிடங்களில் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆனது.

#VivegamSecondLook என்ற ஹேஷ்டேக் மூலம் வைரலாகும் இந்த இரண்டாவது போஸ்டரில், மிகப்பெரிய மரத்தை தோளில் தாங்கியபடி, ஆவேசாமான தோற்றத்தில் இருக்கிறார் தல அஜித்.

மே 1ஆம் தேதி விவேகம் டீசர் வெளியாகப்போகிற உற்சாகத்தில் இருந்த தல ரசிகர்களுக்கு இரண்டாவது போஸ்டர் இரட்டிப்பு மகிழச்சியை அளித்துவிட்டது. ஆனால், திட்டமிட்டபடி மே 1ஆம் தேதி தல அஜித் பிறந்தநாளில் டீசரை வெளியிட முடியாது என்று தகவலும் கசிந்தது. இதனால், ரசிகர்கள் சிறிது ஏமாற்றமடைந்துள்ளனர்.

எடிட்டர் ரூபன் டீசர் வேலையை முடிப்பதில் மும்மரமாக இறங்கியுள்ளார் என்பதால் சீக்கிரமே டீசரை வெளியிட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் ‘I am waiting’ என்று விஜய் பட பன்ச் டயலாக்கை பேசிக்கொண்டிருக்கின்றனர்.