Connect with us

Cinemapettai

உலகக்கோப்பை டீம்மில் விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டதன் காரணம் இது தான் – தலைமை தேர்வாளர் MSK பிரசாத்.

Sports | விளையாட்டு

உலகக்கோப்பை டீம்மில் விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டதன் காரணம் இது தான் – தலைமை தேர்வாளர் MSK பிரசாத்.

வருகின்ற மே மாதம் 30ம் தேதி தொடங்கி ஜூன் 14 வரை உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற இருக்கின்றன.

அணைத்து நாடுகளும் தங்களின் டீம்களின் லிஸ்ட் அறிவித்து வந்த நிலையில், விராத் கோலி தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று மதியம் அறிவித்துள்ளது.

Virat Kohli (capt), Rohit Sharma (vice capt), Shikhar Dhawan, KL Rahul, Vijay Shankar, MS Dhoni (wk), Kedar Jadhav, Dinesh Karthik, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Hardik Pandya, Ravindra Jadeja, Mohammed Shami.

கிட்டத்தட்ட முன்பே மெஜாரிட்டி வீரர்கள் முடிவான நிலையில் சில இடங்களுக்கு தான் போட்டி இருந்தது. யார் உள்ளே யார் வெளியே செல்வார்கள் என்று பேச்சு பல நாட்களாக நடந்து வந்தது.

இந்நிலையில் கட்டாயம் என்று சொல்லப்பட்ட அம்பதி ராயுடு, மற்றும் ஸ்டார் பிளேயர் ஆனா ரிஷப் பண்ட் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை.

மேலும் கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர் டீம்மில். ரவீந்திர ஜடேஜா மூன்றாவது ஸ்பின்னர் ரோலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

MUMBAI, INDIA 

தேர்வாளர் பிரசாத் பிரஸ் இடம் கூறியதன் தொகுப்பு ..

DINESH KARTHIK

பண்ட் மற்றும் கார்த்திக் டீம்மில் ஆடும் சூழல் தோனிக்கு காயம் ஏற்படும் சமயத்தில் தான் நிகழும். முக்கியமான போட்டி சமயத்தில் விக்கெட் கீப்பிங்கும் முக்கியம் தான். அந்த மாதிரி சூழலில் அழுத்தத்தை தாங்க சிறந்த வீரர் தினேஷ் என்று முடிவெடுத்தோம். பண்ட் திறமை மிக்கவர், அவர் வசம் நேரம் அதிகம் உள்ளது.

VIJAY SHANKAR

நம்பர் நான்கில் ஆட நிர்வாகம் ராயுடு, பண்ட், கார்த்திக், விஜய் ஷங்கர் மற்றும் முன்பு மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் என பலரை முயற்சித்தனர். மேலும் தோனி, ராகுல், ஜாதவ் கூட ஆடலாம் என பேசப்பட்டதாம்.

விஜய் ஷங்கர் முப்பரிமாணம் உள்ள வீரர் என்பதால் ராயுடுவுக்கு பதில் அவருக்கு வாய்ப்பு சென்றுள்ளது. அருமையான பீல்டர், நல்ல பேட்ஸ்மான் அதுமட்டுமன்றி பந்துவீச்சும் பிளஸ். குறிப்பாக மேக மூட்டம், மழை போன்ற சமயங்களில் நல்ல உதவிகரமாக இருக்கும். தோனி, ஜாதவ், கார்த்திக் என்று இருந்தாலும் தொடர் ஆரம்பத்தில் விஜய் ஷங்கர் நான்கில் ஆடும் வாய்ப்பே அதிகம்.

வெறும் மூன்று வேகப்பந்துவீச்சாளர் தான், ஜடேஜா இரண்டாம் பாதி, சமயத்தில் குறிப்பாக ட்ரய் பிட்சுக்களுக்கு தேவை படுவார் என்றும் சொல்லியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top