இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணத்தில் உள்ளது நாம் அறிந்ததே. இதில் ஒரு நாள் தொடரில் 5-0 என்றும் இந்தியா எளிதில் வெற்றி பெற்றதது. நான்காவது ஒரு நாள் போட்டி தோனியின் 300வது போட்டி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால் ஐந்தாவது போட்டி முடிவில் தோனி இரண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளார் . இது பலருக்கு தெரிவதற்கான வாய்ப்பு இல்லை.

ஸ்டும்பிங் ஜாம்பவான்:

இலங்கை அணியின் பேட்டிங்கின் பொழுது யுவேந்திர சாஹல் பந்தில் அகிலா தனஜயாவை ஸ்டும்ப்பிங் செய்து அவுட் ஆக்கினார். இது சர்வதேச ஒரு நாள் போட்டியில் அவரது 100வது ஸ்டும்ப்பிங் ஆகும். மேலும் சங்கக்காராவின் 99 ஸ்டும்ப்பிங் என்பதே தற்போதைய உலக சாதனை. இதனை முறியடித்தார்.

நாட்-அவுட் நாயகன்:

ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை நாட் அவுட் ஆகாமல் இருந்தது தென் ஆப்பிரிக்காவின் ஷான் பொல்லாக்கும்,  இலங்கையின் சமிந்தா வாசும் –  73 நாட்- அவுட்கள்.  இந்திய அணி 46.3 ஓவரில் இந்த கடைசி போட்டியை வென்ற பொழுது தல டோனி நாட் அவுட் ஆக இருந்தார். இது அவர் 74 வது முறை நாட் அவுட் ஆகாமல் இருந்த இன்னிங்ஸ் ஆகும் . இதிலும் இப்பொழுது முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இன்னும் 342 ரன்கள் எடுத்தால், 10,000 ரன்களை கடந்து மேலும் ஒரு சாதனை படைப்பார். வி ஆர் வைட்டிங் தல….