dhoni
dhoni

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு நேற்று பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு முன் 2011 இல் இதே நாளில் அதாவது ஏப்ரல் 2-ஆம் தேதியன்று தான் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது. அதே ஏப்ரல் 2-ஆம் தேதியன்று தோனி பத்மபூஷண் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Padma Awards MSD

மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை மத்திய அரசு வழங்கும்.

இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 84 பேர் ‘பத்ம’ விருதுகள் பெற தேர்வாகினர்.இம்முறை 2 கட்டமாக விருது வழங்க முடிவானது. இதன்படி, முதல்கட்டமாக சென்ற மாதம் 20-ஆம் தேதி 43 நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இளையராஜா அவர்கள் அப்பொழுது தான் விருது பெற்றனர்.

Padma Awards

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக நேற்று 43 பேருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பத்ம விருதுகளை வழங்கினார். விழாவில் தோனி ராணுவ உடையில், மார்ச் பாஸ்ட் செய்து, வந்து குடியரசுத் தலைவரிடம் பத்மபூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். இதனை பலரும் ஆரவாரமாக உற்சாகப்படுத்தினார்.

விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

MSDhoni Narendra Modi Sakshi Dhoni
இதோ வீடியோ லிங்க் …

Padma Awards

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி உள்ளிட்டோர் பத்ம விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.