கிகி சேலஞ்ச்

கனடா நாட்டை சேர்ந்த பிரபல ராப் பாடகர் டிரேக் என்பவர் எழுதி வெளியிட்ட பாடலின் பெயர் ‘இன் மை பீலிங்ஸ்’. இந்த பாடலில் வரும் ‘கி கி டூ யூ லவ் மீ’
பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க, அதற்கு ஏற்ப நடனம் ஆட வேண்டும். ஓடும் காரில் இருந்து இறங்கி ஆடவேண்டும் என்பது தான் ட்விஸ்ட். இதுதான் ‘கிகி சேலஞ்ச்’ அல்லது ‘இன் மை பீலிங்ஸ் சேலஞ்ச்’.

KIKI CHALLENGE

செலிபிரிட்டிகள் , பொதுமக்கள் என பலரும் இதனை செய்து வருகின்றனர்.
கேட்பதற்கும், பார்ப்பதற்கும், சுவாரசியமாக இருந்தாலும், ‘கிகி சேலஞ்’ செய்து பல விபத்துகள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் இது போன்ற விபரீத விபத்துகளை தடுக்க காஜல் ஐடியா தந்துள்ளார்.

தன்னுடைய படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காப்பில் இந்த விடியோவை எடுத்துள்ளார். லேட் ஆக தான் நாங்கள் இணைகிறோம் இந்த லிஸ்டில் , ஆனால் இது ரொம்ப பாதுகாப்பானது. நாங்க ரூல்ஸ் மதிப்பவர்கள் என்றும் கூறியுள்ளார்.