fbpx
Connect with us

Cinemapettai

டென்சன் ஆன கேப்டன் கூல் – அம்பயர்களுடன் வாக்குவாதம். CSK கடைசி பாலில் த்ரில் வெற்றி. என்ன தான் பாஸ் நடக்குது இங்க ?

Sports | விளையாட்டு

டென்சன் ஆன கேப்டன் கூல் – அம்பயர்களுடன் வாக்குவாதம். CSK கடைசி பாலில் த்ரில் வெற்றி. என்ன தான் பாஸ் நடக்குது இங்க ?

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய லீக் போட்டியில் ஓவரின் கடைசி பாலில் சென்னை அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 152 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்தது.

அந்த ஓவரின் முதல் பந்தில் ரவிந்திர ஜடேஜா சிக்சருக்கு பறக்கவிட்டார். ஷாட் அடித்த அவரும் கீழே விழுந்தார் பந்துவீசிய ஸ்டோக்ஸும் தடுமாறி விழுந்தது ஆச்சர்யம் தான் . தொடர்ந்து இரண்டாவது பந்தை ஸ்டோக்ஸ் நோ-பாலாக வீசினார், ஒரு ரன் ஓடி எடுக்கப்பட்டது. அடுத்த பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார்.
மூன்றாவது பந்தில் தோனி போல்டானார்.

நான்காவது பந்தை ஸ்டோக்ஸ் புல் டாஸாக வீச, இரண்டு ரன் ஓடினர் . முதலில் களத்தில் இருந்த அம்பயர் நோ-பால் என கையை உயர்த்தினார். பின் ஸ்குவையர் லெக் அம்பயர் சைகை எதுவும் வழங்காததால் தன் முடிவை மாற்றினார். இது நோ-பால் இல்லை என்றார். எனவே, நோ பால் திரும்பப் பெறப்பட்டது. இதைக் கண்ட ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது விக்கெட்டை இழந்து வெளியே சென்ற தோனி, பவுண்டரி அருகே இருந்து களத்துக்குள் நுழைந்தார். தோனி எல்லை மீறி அம்பயரிடம் வாக்குவாதம் செய்த காட்சி பெரும் ஆச்சரிய, அதிர்ச்சியாக அமைந்தது.

3 பாலில் 6 ரன் என வந்ததது. ஓவரின் ஐந்தாவது பாலில் 2 ரன் எடுக்கப்பட்டது. பின்னர் வயட் வீசினார் ஸ்டோக்ஸ். ஆக கடைசி பாலில் மூன்று ரன் தேவை வெற்றி பெற பலரும் சூப்பர் ஓவர் செல்லுமா என யோசித்த நேரத்தில், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் சான்ட்னர். சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

csk – courtesy image espn cricinfo

ஐபில் இல் கேப்டனாக தோனிக்கு இது 100 வது வெற்றி. எனினும் சர்ச்சை நிறைந்த மறக்கமுடியாத வெற்றியுமாக மாறியது. தோனிக்கு தண்டனையாக அவரது மேட்ச் பணத்தில் 50 சதவிகிதம் பைன் போடப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top