விமானத்திற்காக காத்திருந்த போது, இம்ரான் தாகிரின் குழந்தையுடன் தல தோனி குழந்தை போல விளையாடியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த எம் எஸ் தோனி பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். இவர் கேப்டனாக சாதித்ததோடு, அவர் விளையாடும் ஸ்டைலிலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.

 

இவர் தற்போது நடைப்பெற்று வரும் ஐபிஎல் 10வது சீசனில் புனே அணிக்காக விளையாடி வருகின்றார். அதே அணியில் தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாகிரும் விளையாடி வருகின்றார்.

போட்டியை முடித்து விட்டு மற்றொரு நகரில் நடக்கும் போட்டிக்கு செல்லும் போது, இம்ரான் தாகிர் தன் மகனை கூட்டி சென்றுள்ளார். விமானத்திற்காக காத்திருந்த போது, சாதாரண மனிதரைப் போல எந்த அலட்டலும் இல்லாமல் தரை அமர்ந்து இம்ரான் தாகிரின் மகனுடன் பொம்மை கார் வைத்து விளையாடி மகிழ்ந்தார்.