மும்பை: இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன் என வர்ணிக்கப்படும் மகேந்திர சிங் டோணி, ஐபிஎல் தொடரில் 7- வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கும் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் திருவிழா தற்போது 10வது ஆண்டை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரை பொறுத்த வரை எத்தனை சாதனைகள் நிகழ்த்தப்பட்டாலும் இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன் என வர்ணிக்கப்படும் மகேந்திர சிங் டோணியின் சாதனை எப்போதும் தனித்துவம் வாய்ந்தது தான், ஐபிஎல் தொடரிலும் அவரின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.

MS Dhoni in seventh heaven with another IPL record

சென்னை சூப்பர் கிங்ஸ் இவ்வாண்டு மற்றும் இதற்கு முந்தைய ஆண்டு ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் தடைக்குள்ளாக்கியது. ஆனால் அதுவரை 8 சீசன்களிலும் சிஎஸ்கே அணி கேப்டனாக இருந்து அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தவர் டோணிதான்.

அதிகம் படித்தவை:  சந்தானம் எந்த நடிகையை ஏமாற்றினார்; சூரி வாழ்கை கொடுத்தார்– நடிகை ஓபன் டாக்

டோணி தலைமையிலான சிஎஸ்கே அணி இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி அனைத்து முறையும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளில் வென்றுள்ளது.

அதிகம் படித்தவை:  குழந்தைகளுக்கான பாண்டஸி ஹாரர்: சங்குசக்கரம் ! ட்ரைலர் உள்ளே !

அந்த வகையில் டோணி இந்தாண்டு கேப்டனாக இல்லாவிட்டாலும், அவர் இடம்பெற்றுள்ள புனே அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது சாதனையாக கருதப்படுகிறது. மேலும் 10 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் 7- வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கும் வீரர் என்ற சாதனைக்கும் டோணி சொந்தக்காரர் ஆகியுள்ளார் டோணி.