மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனி ஐசிசி-ன் மூன்று வித கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே நபர்  என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தற்பொழுது  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி  வீரராக மட்டும் விளையாடி வருகிறார்.

மகேந்திர சிங் தோனி கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனவே  டெஸ்ட்போட்டிகளில் விரித்திமான் சாஹா விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். ஒரு நாள் போட்டிகளிலும் தன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் தோனி. பின் விக்கெட் கீபர் பாட்ச்மேனாக விளையாடி வருகிறார். இந்த நிலையில், லிமிடெட் ஓவர் போட்டிகளில் டோனிக்கு பதிலாக விருத்திமான் சாஹா அல்லது ரிஷப் பந்த் இவர்களில் ஒருவரை விளையாட  அழைக்கலாம் என குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

தோனிக்கு அதரவு

விளையாட்டில் எப்போதும் ஒரு வீரரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பது இயல்பானது தான். சில சமயங்களில் அனைவருக்கும் தடுமாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும், என்று இவருக்கு கோலி, ரவி சாஸ்த்ரி, கவாஸ்கர், தேர்வாளர்கள் என்று பலரும் அதரவு தெரிவித்துள்ளனர்.

MS Dhoni & Sakshi

நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடர் முடிந்ததும் தல தோனி தன் கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார்.

MSD in airport

எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமி

கடந்த சனிக்கிழமை தோனி ஐக்கிய அரபு நாட்டில் தன் முதல் கிரிக்கெட் அகாடெமியை துவக்கி வைத்தார். இது துபாயை மைய்யமாக கொண்ட பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் கிளப்பின் கூட்டணியில் உருவாகியுள்ளது.

உலகத்தரத்தில் உருவாகியுள்ள இந்த அகாடமி அங்குள்ள ஸ்பிரிங்ஸ் டேல் ஸ்கூலில் உள்ளது. இரண்டு மாதங்களாக நடந்து வரும் இதை, தோனி அவர்கள் சனிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோச், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பார்ட்னர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

MS DHONI CRICKET ACADEMY

முன்னாள் மும்பை பந்துவீச்சாளர் ‘விஷால் மஹாடிக்’ தான் இங்கு தலைமை கோச்சி. நான்கு டர்ப்பு , மூன்று சிமினேட், மேட் பிட்ச். ஸ்பின் மற்றும் வேக்கப் பந்து வீசும் எந்திரம், சேப்டி நெட், நைட் ப்ராக்டிஸ் விளக்குகள், வீடியோ அனாலிசிஸ் செய்யும் அறையும் உள்ளதாம்.

தோனியின் பேட்டி

“எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, நானும் இதில் ஒரு அங்கம் என்பதால், என்னால் முடிந்தவரை இதன் வெற்றிக்கு பாடுபடுவேன். எனது கனவுகளில் ஒன்று கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்பது. இதுவே அதன் முதல் படி. இங்கு இருக்கும் வீரர்களின் ஆர்வமே இந்த அகாடமியை முன் கொண்டு செல்லும்.” என்றார்.

சினிமாபேட்டை கிசு கிசு

ஏற்கனவே ஹர்பஜன் சிங், விரேந்தர்  சேவாக் போன்றவர்கள் இந்தியாவில் தங்கள் கிரிக்கெட் அகாடமி வைத்துள்ள நிலையில், வழக்கம் போல்  தல தோனி தான் வேற லெவல் என்று நிரூபிக்கும் விதமாக துபாயில் தன் அகாடமி ஆரம்பித்துள்ளார். அங்கு ஆரம்பித்தால் நம் லோக்கல் அரசியல் வாதிகளுக்கு வளைந்து கொடுக்கும் அவசியம் வராமல் போய்விட்டது. வாழ்த்துக்கள் மாஹி.