புனே: முன்னாள் இந்திய கேப்டனின் தீவிர ரசிகையாக தென் ஆப்ரிக்காவின் ஒலிம்பிக் நாயகி காஸ்டர் செமியா மாறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ‘தல’ தோனி. ஐசிசியால் நடத்தப்படும் மூன்று விதமான உலக்க்கோப்பை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்தவர். தற்போது தனது பொறுப்புகளில் இருந்து விலகி, ஜாலியாக கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை சமீபத்தில் பார்த்த, தென் ஆப்ரிக்காவின் ரியோ ஒலிம்பிக் நாயகி, காஸ்டர் செமியா பார்த்துள்ளார்.

இதன் பின் செமியா, தோனியின் முழுநேர ரசிகையாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செமியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’ தோனி தற்போது தான் உங்களின் படத்தை பார்த்தேன். ஊக்கம் தரும் வகையில் உருவாகியுள்ள கதை, சல்யூட்..’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.