புனே: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபில் தொடரின் லீக் போட்டியில் தோனி, கடைசி நேரத்தில் வெளுத்து வாங்க புனே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் புனேவில் நடந்த 24வது லீக் போட்டியில், புனே, ஐதராபாத் அணிகள் மோதின..

இதில் ’டாஸ்’ வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். புனே அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார். ஐதராபாத் அணியில் யுவராஜ் சிங் காயம் காரணமாக நீக்கப்பட்டு பிபுல் சர்மா அணியில் இடம் பிடித்தார்.

அதிகம் படித்தவை:  சன்னி லியோனுடன் "கா" செய்ய பிரபல கிரிக்கெட் வீரர் ஆர்வம்!

இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, ஹென்ரிக்ஸ் (55*) அரைசதம் அடித்து கைகொடுக்க, ஐதராபாத் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது.

ஜொலிக்காத் ஸ்டார்:
எட்டக்கூடிய இலக்கை துரத்திய புனே அணிக்கு, துவக்க வீரர் ரகானே (2), ஸ்மித் (27), ஸ்டோக்ஸ் (10) என எந்த ஸ்டார் வீரர்களும் சோபிக்கவில்லை. திருப்பதி (59) அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார்.

தோனி நம்பிக்கை:
இதையடுத்து களமிறங்கிய தோனி அவ்வப்ப்போது பவுண்டரி அடித்து நம்பிக்கை அளித்தார். இவருடன் ஜோடி சேர்ந்த மனோஜ் திவாரி, தன்பங்கை சரியாக செய்தார். கடைசி நேரத்தில் ’தல’ தோனி ருத்ரதாண்டவம் ஆட, புனே அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (61), திவாரி (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐதராபாத் அணி சார்பில், புவனேஷ்வர், பிபுல், ரசித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்