அஜித்தை எல்லோருக்கும் தான் பிடிக்கும், அவருடன் ஒரு படத்தில் நடித்தால் போதும் புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். அந்த வகையில் அஜித்துடன் ஒரு சில படங்களில் நடித்தவர் எம்.எஸ்.பாஸ்கர்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் என்பவர் மிகவும் நல்ல மனிதர், அதைவிட எந்த ஒரு ஈகோவும் இல்லாதவர், கிரீடம் படப்பிடிப்பில் நீண்ட நேரம் என்னை உட்கார வைத்து அவர் நின்றுக்கொண்டே பேசினார்.

அவர் நின்று பேசியது எனக்கு கஷ்டமாக இருந்தது, உடனே நான் எழ, “சார் அதெல்லாம் வேண்டாம், எனக்கு பேக் பெயின் அதனால் நிற்கிறேன்” என கூறினார்.

அவரின் ஈகோ இல்லாத எளிமை என்னை மிகவும் கவர்ந்தது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்