vijay sethupathy

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் எம்.எஸ்.பாஸ்கர்.

vijaysethupathy

அடிப்படையில் டப்பிங் கலைஞர். கொடுத்த வேடத்தை சிறப்பாக செய்யும் எம்.எஸ்.பாஸ்கரின் மகளும் டப்பிங் கலைஞர்தான். இப்போது பாஸ்கர் வீட்டில் இருந்து இன்னொரு வாரிசு சினிமாவுக்கு வருகிறார்.

எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடிகராக அறிமுகமாகிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஒளிப்பதிவாளர் ப்ரேம் இயக்கும் 96 படத்தில் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் நடிக்கிறார்கள்.

இருவரது வாழ்க்கையும் 6 வயதில் இருந்து 96 வயது வரையில் முடிவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடிக்க பொருத்தமான நபரை தேடிக்கொண்டிருந்தார்கள். இப்போது அந்த வேடத்தில்தான் ஆதித்யா பாஸ்கர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

vijay sethupathy

சின்ன வயது த்ரிஷாதான் இன்னும் கிடைக்கவில்லையாம்.மேலும்

தல அஜீத்தைப் போல், நடிகர் விஜய் சேதுபதியும் ஏழைகளுக்காக உதவி செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தனது படங்களுக்கு நல்ல ஓபனிங் கொடுக்கும் முன்னணி ஹீரோக்களில் நடிகர் அஜீத்தும் ஒருவர்.

இவருக்கென் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அஜீத் தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு, தனது பெயரில் நற்பணி மன்றங்களை துவங்கி ரசிகர் மூலம் பல நல திட்டங்களை செய்து வருகிறார் தான் செய்யும் உதவியை பிறருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வார் அஜீத்.

Vijay-sethupathi

அப்படி இருந்தும், சில நேரங்களில் அஜீத் செய்யும் உதவி வெளியுலகத்திற்கு தெரிந்துவிடுகிறது.

தற்போது நடிகர் விஜய் சேதுபதியும் அஜீத் வழியை கடைப்பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நாடக்கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தி தங்க நாணயம் வழங்கினார் விஜய் சேதுபதி. மேலும் சமீபத்தில், அரியலூர் மாவட்ட மாணவர்களுக்கு படிப்பிற்காக உதவித்தொகை வழங்கினார்.

இதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பின்றி இருக்கும் நடிகர், நடிகைகளின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கும், வயதான நடிகர்களுக்கும் உதவி செய்து வருகிறாராம்.