Tamil Cinema News | சினிமா செய்திகள்
எம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திய அவரது மகள்.! புத்தாண்டு பரிசு என்ன தெரியுமா.!
Published on
எம் எஸ் பாஸ்கர் என்றால் தெரியுமோ இல்லையோ ஆனால் பட்டாபி என்றால் அனைவருக்கும் தெரியும்.இவர் முதலில் காமெடி நடிகராக அறிமுகமானார் பின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்தார் தற்பொழுது பல படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

ms baskar
இவர் நடிகர் மட்டும் இல்லை ஒரு டப்பிங் கலைஞரும் கூட அதிக ஹாலிவுட் படங்களுக்கு தமிழ் டப் பேசியுள்ளார், இவரின் மகள் தற்பொழுது அந்த டப் செய்யும் பணியை சில படங்களுக்கு டப்பிங் பேசி வருகிறார்.
எம் எஸ் பாஸ்கர் மகளான ஐஷ்வர்யா தனது தந்தைக்கு புத்தாண்டு பரிசு சர்ப்ரைசாக கொடுக்க வேண்டும் என்று தந்தை கண்ணை கட்டிவிட்டு பெசன்ட் நகர் பீச்சில் ராயல் என்பீல்ட் புல்லட்டை ஐஸ்வர்யா பரிசளித்துள்ளார்.
இதை எதிர்பார்க்காத பாஸ்கர் ஆனந்த கண்ணீர் வடித்தார் பின்பு மகளை கட்டி அணைத்துகொண்டார்.
