Connect with us

கொரானா குறித்து பல வருடங்களுக்கு முன்பே கூறிய எம்ஆர் ராதா.. வைரலாகும் வீடியோ

mr-radha-cinemapettai

Videos | வீடியோக்கள்

கொரானா குறித்து பல வருடங்களுக்கு முன்பே கூறிய எம்ஆர் ராதா.. வைரலாகும் வீடியோ

நாளுக்கு நாள் கொரானாவினால் மரண அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. உலகமே நிலைகுலைந்துள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் பாடு விட்டதாய் தெரியவில்லை.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் நாளுக்கு நாள் குறைந்தது 200 கேஸ்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் மொத்த தமிழகமும் பீதியில் உள்ளது. மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை இந்த நிலை தொடரும் என்றால் மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறிதான்.

இந்நிலையில் நடிகர் எம் ஆர் ராதா பல வருடங்களுக்கு முன்பே கொரானா பற்றிய விழிப்புணர்வை கூறியுள்ளதாக பேசப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரத்தக்கண்ணீர் படத்தின் மூலம் நடிப்பால் அனைவரையும் அசர வைத்தவர் தான் நடிகர் எம் ஆர் ராதா. உலகம் குறித்த அவரது தொலை தூர சிந்தனை பல படங்களில் பிரதிபலித்துள்ளது.

அந்த வகையில் அவர் பேசிய கொரானா வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூட ஷேர் செய்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top