உள்ளூரில் படப்பிடிப்பு ரத்து ஆனதால், தாய்லாந்தில் மிஸ்டர். சந்திரமௌலி படக்குழு ! போட்டோ உள்ளே !

Mr.Chandramouli

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா, வரலக்ஷ்மி சரத்குமார் , சதிஷ், சதீஷ், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சந்தோஷ், ‘மைம்’ கோபி, ஜெகன், விஜி சந்திரசேகர் நடிப்பில் திரு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘Mr.சந்திரமௌலி’.தனஞ்சயன் தயாரிக்கிறார். விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி. இசை அமைக்கிறார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

team chandramoulie

ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு இரவு பகல் பாராது நடந்துவருகிறது. ஏப்ரல் 27 என ரிலீஸ் தேதியை முன்பே அறிவித்துவிட்டது படக்குழு. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. எனினும் தயாரிப்பாளர் சங்கம் அணைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என அறிவித்தனர்.

Mr Chandramouli
Mr Chandramouli
Mr Chandramouli

இந்நிலையில் படப்பிடிப்புக்காக ‘மிஸ்டர் . சந்திரமௌலி’ படக்குழுவினர் தாய்லாந்தில் உள்ள கிராபி தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு பிருந்தா மாஸ்டர் தலைமயில் பாடலின் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது.

Mr Chandramouli

வருகிற 23-ஆம் தேதி ஷூட்டிங் முடித்துக்கொண்டு இந்தியா திரும்புமாம் படக்குழு.

Mr Chandramouli

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் 23-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருப்பதால் 23-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு படப்பிடிப்புகள் நடத்தவும் முடியாது.

Comments

comments