Connect with us

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் படம் இரண்டாம் பாகம், மாரி 2 ஹீரோயின்- லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் படம் இரண்டாம் பாகம்:

வய் நாட் ஸ்டுடியோஸ், சசிகாந்த் தயாரிப்பில், வெளிவந்து மாஸ் ஹிட் ஆன படம் விக்ரம் வேதா. சில பல நாட்களாகவே இவறின் அடுத்த தயாரிப்பு பற்றி பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது.

ஹாலிவுட்டில் ஒரு படத்தையோ, அல்லது மூன்று நான்கு படங்களை கலாய்த்து எடுக்கும் ஸ்பூப் படங்கள்(spoof movie) நிறைய வெளிவரும். அதுவும் அங்கு ஹிட் ஆகும். நம்ப ஊரிலோ லொள்ளு சபா என்ற டிவி சீரிஸ் வந்துக்கொண்டிருந்த சமயம். 2010 ஆம் வருடம், புது தயாரிப்பாளர் ஆர்க்கிடெக்ட் சசிகாந்த் , இயக்குனராக விளம்பரப்படங்கள் இயக்கும்சி.எஸ்.அமுதன், ஹீரோ ரேடியோ ஜாக்கியான மிர்ச்சி ஷிவா என்ற காம்பினேஷனில் ஆரம்பிக்கப்பட்ட படம் தான் தமிழ் படம். ஆரம்பத்தில் பல எதிர்ப்புகளை சந்தித்தாலும், இறுதியில் தயாநிதி அழகிரியின் கிளவுட் நயன் மூலமாக வெளியிடப்பட்டு தாறுமாறு ஹிட் ஆனது இந்தப்படம்.

இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தான் வய் நாட் ஸ்டுடியோஸ் எடுக்கும் அடுத்த படம் என்பது தற்போழுது உறுதி ஆகியுள்ளது. இந்நேரத்தில்’ வய் நாட் ஸ்டுடியோஸ்’ தன் ட்விட்டரில்  மறைமுகமாக இதை அறிவித்துள்ளனர்.

இவர்கள் எதை அலசுகிறார்கள்?

தமிழக அரசியல் சூழ்நிலை, அகிரா குரோசோவா, நார்த் கொரியா பிரிச்சனை, மிக்சர் / ஊறுகாய்.

இதனைப்பார்த்த ட்விட்டெர் வாசிகள் ஒருமித்தமாக கூறியது மிக்சர்/ஊறுகாய் என்ற பதில் தான்.

மாரி 2 படத்தின் ஹீரோயின் இவர் தான்:

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பார்ட் படமாக எடுப்பது தான் தற்பொழுதைய ட்ரெண்ட். அந்த வகையில் தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் கூட்டணியில் மாரி 2  ஆரம்பிக்கப்போவது நாம் அறிந்ததே.

இப்படத்தை தயாரிக்கும் தனுஷின்  வன்டர் பார் நிறுவனம் தன் ட்விட்டர் கணக்கில் ” வில்லனாக மாரி 2 வில் இணைகிறார் டோவினோ தாமஸ். காத்திருங்கள் அடுத்த செய்திக்காக.” என்று டீவீட்டினர்.

டொவினோ தாமஸ், இவர் மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். மாரி 2  வாயிலாக தமிழில் அறிமுகம் ஆகிறார். இவர் மலையாளத்தில் நடித்து வெளிவர உள்ள ‘தரங்கம்’ படத்தை வன்டர் பார் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. அப்பொழுது ஏற்பட்ட பழக்கத்திலலேயே இவரை தமிழுக்கு அழைத்து வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் நேற்று மாலை  தன் ட்விட்டரில் இயக்குனர் படத்தின் ஹீரோயின் பற்றிய டீவீட்டை வெளியிட்டார்.

“மாரி 2வில் இணைகிறார் சாய் பல்லவி . கதையை மையப்படுத்தும் கதாபாத்திரம் அவருடையது”

இந்தப்படம் இரண்டு மொழிகளில் தயாராகிறது என்ற கொசுறு செய்தியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கா அல்லது தமிழ் மற்றும் மலையாளமா என்று ரசிகர்கள் விவாத்தித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top