விஜயகாந்த காலத்தில் வில்லன் நடிகராக புகழின் உச்சியில் இருந்தவர் மன்சூரலிகான். சமீப காலங்களில் படவாய்ப்பு கிடைக்காத காரணத்தால், சொந்தமாகவே படம் தயாரித்து அதில் நடிக்கவும் செய்கிறார்.

பல அதிரடி தோல்வி படங்களுக்கு இப்போது ஒரு புதிய படம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் அவர். மேலும் இந்த படத்திற்கு அவர் ஒரு வில்லங்கமான தலைப்பை வைத்துள்ளார். அஜித்தின் வேதாளம் படத்திற்கு போட்டியாக பூதாளம் என இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளார் .

மேலும் இதில் தன்னுடைய மகன்கள் மற்றும் மகளை படத்தில் நடிக்கவைத்துள்ளார் மன்சூர்.

ஒரு 70 வயது விவசாயியாக வரும் மன்சூரலிகான் படும் துயரங்களை இந்த படம் எடுத்துகாட்டும் என கூறப்படுகிறது.