அதிக நாட்கள், குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படங்கள்.. விக்ரமின் படத்தை ஜவ்வாக இழுத்த ஷங்கர்

பொதுவாக சினிமாவை பொறுத்தவரையில் இயக்குனர்கள் படத்தின் பட்ஜெட் மற்றும் கால்ஷீட்டை முன்னதாகவே சொல்லிவிடுவார்கள். அதிலும் சொன்னதுபடி ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தான் சரியாக எடுப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக கூடும்.

அதேபோல் கொடுக்கப்பட்ட கால்ஷீட்டும் சில சமயங்களில் அதிகப்படியான நாட்கள் தேவைப்படும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் எடுக்கப்பட்ட படமும், மிகக் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படமும் எது என்பதை தற்போது பார்க்கலாம்.

Also Read : கேவலமாய் ப்ரமோஷன் செய்த சுஹாசினி, விக்ரம்.. வேண்டா வெறுப்பாய் பேசிய பேச்சு

மிகக் குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்றால் நாம் எல்லோருக்கும் ஞாபகம் வருவது சுயம்வரம் படம் தான். கிட்டத்தட்ட 14 இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கியிருந்தனர். ஏகப்பட்ட திரை பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர். சுயம்வரம் படம் 23 மணி நேரம் 58 நிமிடங்களில் எடுக்கப்பட்டது.

அந்தச் சமயத்தில் மிகக் குறுகிய காலத்தில் எடுத்த படம் என்று கின்னஸ் உலக சாதனையை சுயம்வரம் படம் பெற்றது. ஆனால் இந்த படம் 1999 இல் எடுக்கப்பட்டது. மேலும் சுயம்வரம் படத்தை விட மிகக் குறுகிய நேரத்தில் எடுக்கப்பட்ட படம் நடு இரவு. இந்த படம் 2014 இல் வெளியானது.

Also Read : அவங்கள பார்த்தாலே நடிப்பே மறந்து விடும்.. மேடையில் சிலிர்த்து போய் பேசிய விக்ரம்

இப்படம் வெறும் 12 மணி நேரத்தில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மதியம் 6:00 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி மறுநாள் காலை 6:00 மணி வரை படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் புதுகை மனிஷா இயக்கிய இருந்தார். நடு இரவு படம் தான் தற்போது வரை குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படமாக உள்ளது.

அதேபோல் மிக நீண்ட நெடு நாட்களாக எடுக்கப்பட்ட படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ படம். விக்ரம் கதாநாயகனாக நடித்த படம் கிட்டதட்ட 190 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்தப் படத்தை ஷங்கர் ஜவ்வாக இழுத்து விட்டார். இதனால் அப்போது விக்ரம் வேறு படத்தில் நடிக்க முடியாமல் தவித்து வந்தார்.

Also Read : ஷங்கர் படத்தில் நடிக்க முடியாமல் போன திரிஷா.. பல வருடமாக போராட்டம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்