Connect with us
Cinemapettai

Cinemapettai

amazon-releasing-movies

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடுத்த ஐந்து படங்களை ரிலீஸ் செய்யும் அமேசான்.. அலைகடலுக்கு அணை போட முடியுமானு தெரிலயே

தலைக்கு மேலே வெள்ளம் போயிட்டு இருக்க நிலைமையில, இந்த ஒரு சண்டை தேவைதானா. கண்டிப்பா, ஏனென்றால் சினிமா துறை கோமா ஸ்டேஜுக்கு சென்று விட்டது உண்மைதான்.

OTT பிளாட்பார்மில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பரபரப்பான செய்தி தற்போது வெளிவந்துள்ளது. அதாவது ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தற்போது ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

இதனைக் கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கடுமையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இனி 2D என்டர்டைன்மென்ட் வெளியிடும் அனைத்து படங்களும் OTT பிளாட்பார்மில் வெளியீட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனை எதிர்த்து பிரபல தயாரிப்பாளரான அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா கூறுகையில் OTT பிளாட்பார்ம் என்பது வரவேற்க கூடியது, ஏனென்றால் இன்னும் ஐந்து படங்கள் தயாரிப்பாளர்கள் வெளியிட உறுதி செய்துள்ளனர்.

அதில் மாஸ்டர், சூரரை போற்று, சித்தார்த் நடிக்கும் டக்கர், அருண் விஜய் நடிக்கும் பாக்சர், கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி, எஸ் ஜே சூர்யாவின் பொம்மை போன்ற படங்கள் பேசப்பட்டு வருகிறதாம்.

அதுமட்டுமில்லாமல் தற்போதைய சூழ்நிலைக்கு கடன் சுமையைக் குறைப்பதற்கு இது மட்டுமே வழி என்ற அக்கறையில் வரவேற்றுள்ளார். இது இல்லாமல் 3 முதல் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களும் வருகிறதாம்.

இப்படிப்பட்ட வளர்ச்சியை தடுப்பது, ரெட் கார்டு போடுவது நியாயமில்லை என்றும் இதற்கு ஒரு குழு அமைத்து சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top