பிரியதர்ஷன இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஓணம் ஸ்பெஷலாக கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் மலையாள படம் ஒப்பம்.

மர்டர் மிஸ்ட்ரி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லால், பார்வையற்றவராக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் சிறப்பு காட்சியை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அண்மையில் சென்னையில் பார்த்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டியதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது ‘தல’ அஜித்தும் இப்படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டியுள்ளாராம்.