கபாலி, பாகுபலி வியாபாரத்தை மிஞ்சி சாதனை படைத்த படம்

கடந்த சில வருடங்களாக அரசியலில் பிசியாக இருந்த சிரஞ்சீவி மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியுள்ள படம் ‘கைதி நம்பர் 150’ இளையதளபதி விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்படி இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை கிளாஸிக் சினிமாஸ் நிறுவனம் ரூ.13.5 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் அமெரிக்காவில் அதிக விலைக்கு வியாபாரம் ஆன தெலுங்கு படங்களில் பிரம்மோத்சவம் 13 கோடிக்கும், சர்தார் 10 கோடிக்கும், பாகுபலி 9 கோடிக்கும் விற்பனையாகியுள்ள நிலையில் சிரஞ்சீவி படம் அனைத்து வியாபாரத்தையும் முறியடித்துள்ளது.கபாலி 8.5 கோடி விலைக்கு வியாபாரம் ஆனது.

ஒருவேளை ‘பாகுபலி 2’ இதைவிட அதிக விலைக்கு வியாபாரம் ஆனால், சிரஞ்சீவியின் ‘கைதி நம்பர் 150’ இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments