போலீஸின் அராஜகத்தை தோலுரித்த 5 படங்கள்.. ரீ-என்ட்ரி கொடுத்து மிரள விட்ட சூர்யா

சமீப காலமாகவே தமிழ் சினிமா அதிகமாக பயன்படுத்தப்படும் களங்களில் ஒன்று காவல்துறை. இதை மையமாக வைத்து வெளியான திரைப்படங்களில் போலீஸின் அராஜகத்தை தோலுரித்த திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கொண்டிருக்கிறது. இந்தப் படங்களின் மூலம் போலீஸ் ஸ்டேஷனிலும் போலீஸ் குறித்த மறைக்கப்பட்ட ஒரு சில உண்மைகள் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது.

விசாரணை: 2015ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். இதில் விசாரணைக்காக மளிகைக் கடையில் வேலை செய்யும் கதாநாயகனும் அவனுடைய கூட்டாளிகளையும் அழைத்துச் சென்று பொய் வழக்கு பதிவு செய்து, அதன் பிறகு அவர்களது பதவிக்காக கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்வதுபோல் படமாக்கி இருப்பார்கள். இதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மிஷா மிசா கோசலுடைய நடிப்பு படத்தை பார்ப்போரை உட்பட மிரள விட்டிருக்கும்.

ஜெய்பீம்: ஞானவேல் ராஜா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்த படத்தில், இருளர் ஜாதியை சார்ந்த செங்கேணி மற்றும் ராஜாக்கண்ணு தம்பதியர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏற்பட்ட கொடுமைக்கு நீதி கிடைக்கும் வகையில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக எடுக்கப்பட்ட படமாகும்.

இதில் இருளர் இனத்தை சேர்ந்த ராஜாகண்ணை பொய் திருட்டு வழக்கைப் பதிவு செய்து, அவனை ஸ்டேஷனில் அடித்தே கொன்று வேறு மாநிலத்தில் சடலத்தை போட்டுவிடுவார்கள். அதன்பிறகு நிறமாத கர்ப்பிணியாக இருக்கும் செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியுடன் ராஜாக்கண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை கண்டுபிடித்து அவனுடைய கூட்டாளிகளையும் உயிரோடு மீட்டெடுப்பது தான் இந்த படத்தின் கதை.

காவல்துறை உங்கள் நண்பன்: ஆர்டிஎம் இயக்கிய இந்தப் படமும் தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதுதான். சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியர்கள் அழகான வாழ்க்கையை துவங்கும்போது கதாநாயகன் தவறுதலாக போலீஸ் அதிகாரியான பகைத்துக் கொள்கிறான்.

அதன் பிறகு போலீஸ் அதிகாரியாக இருக்கும் மைம் கோபி கதாநாயகன் சுரேஷ் ரவியை அடித்தே கொன்று விடுகிறான். இப்படி படத்தின் டைட்டிலுக்கு முரணாக இருக்கும் கதை, போலீஸின் அராஜகத்தை வெளிப்படையாக இந்த படத்தின் மூலம் காட்டப்பட்டிருக்கும்.

டாணாக்காரன்: இயக்குனர் தமிழ் இயக்கிய இந்த படத்தின் மூலம் காவல்துறைக்கு ட்ரைனிங் போவோர் என்னென்ன பிரச்சினையை சந்திக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஆனால் அதையும் சமாளித்து விக்ரம் பிரபு வெற்றிகரமாக போலீஸ் ட்ரைனிங் முடிக்கிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை.

ரைட்டர்: ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, இனியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் காவல்துறையினர் அதன் அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பதையும், அதிகாரத்திற்குள் இருக்கும் பல பிரச்சினைகளையும் இந்தப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குறிப்பாக இந்த படத்தில் ரைட்டர் ஆக நடித்திருக்கும் சமுத்திரக்கனி ரிட்டயர்மென்ட் நோக்கி பயணிக்கும் காலகட்டத்தில், இரண்டு மனைவிகளுடன் அவர் சந்திக்கும் குடும்ப சிக்கல்களை சமாளித்து, ரைட்டர் ஆக எப்படி தன்னுடைய கதாபாத்திரத்தில் மிளிர்கிறார் என்பதே இந்த படத்தின் கதை.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்