‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. முன்னதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 7 மணிக்கு வெளியாகிறது என்று கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதன்படி போஸ்டர் வெளியானது. ட்விட்டரிலேயே கமல் போஸ்டரை வெளியிட்டார்.

‘விஸ்வரூபம்’ வெளியான உடனே, ‘விஸ்வரூபம் 2’ படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஆனால், படத்திற்கான பணிகள் தாமதம் ஆனது.

இதனால் ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களில் தொடர்ச்சியாக கமல் நடித்தார். ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ என கமல் நடிப்பில் உருவான படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், ‘விஸ்வரூபம் 2’ வெளியீடு எப்போது என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து கமலே கைப்பற்றியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். இதனால் விரைவில் படத்தின் டப்பிங் உள்ளிட்ட இதர இறுதிகட்ட பணிகள் துவங்கும் என தெரிவித்தார்கள்.

இந்த சூழலில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது.

‘விஸ்வரூபம் 2’ முடித்துவிட்டு, ‘சபாஷ் நாயுடு’ பணிகளை கமல் துவங்குவார் என தெரிகிறது.