Connect with us

Cinemapettai

மொட்ட ராஜேந்திரனை இயற்கை முடியுடன் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்.!புகைப்படம் இங்கே.!

mottai rajendran

Cinema News | சினிமா செய்திகள்

மொட்ட ராஜேந்திரனை இயற்கை முடியுடன் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்.!புகைப்படம் இங்கே.!

ஸ்டண்ட் நடிகராக இருந்த ராஜேந்திரன், பாலாவின் நான் கடவுள் படம் மூலம் கொடூர வில்லனாக அறிமுகமானார். முதல்படத்திலேயே ரசிகர்களை மிரட்டிய ராஜேந்திரன், அப்போது முதல் நான் கடவுள் ராஜேந்திரனாக மாறினார்.

mottai-rajendran

தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்தவர் இப்போது காமெடியிலும் அசத்தி வருகிறார். 35 வருடமாக சண்டைக்காட்சிகளில் சுமார் 1000 படங்களில் பணியாற்றியிருக்கிறார். நிறைய படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராகவும் இருந்துள்ளார். உருவத்தை பார்த்து பாலா சார், நான் கடவுள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கில் வெங்கடேஷ், பவன் கல்யாண், மலையாளத்தில் மம்மூட்டி உள்ளிட்ட பல நடிகர்களுடன் சண்டை போட்டுள்ளார்.

mottai rajendran

Actor Rajendran

தமிழில், இதுவரை 45 படங்களில் நடித்துள்ளார். மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். அவர் என்ன ஆசைப்படுகிறார்  என்பதை விட இயக்குநர் அவரை வைத்து எந்தமாதிரியான ரோலில் நடிக்க வைக்க விரும்புகிறார்களோ அதை செய்கிறார்.

திருடன் போலீஸ் படத்தில் பெண் கேரக்டரில் நடித்தார்.  பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில், ராஜேஷ் தான் என்னை வேறு டிராக்கிற்கு மாற்றினார். அதைத்தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல பட வாய்ப்புகள் அமைந்தது, அந்த படங்களும் வெற்றியை கொடுத்திருக்கிறது.

நான் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கும் போது அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்துவிட்டேன். விழுந்தபிறகு தான் தெரிந்தது அது ஏதோ கெமிக்கல் கலந்த தண்ணீர் என்று..

அப்போதிருந்து எனக்கு தலையில் முடியே வளரவில்லை. பிதாமகன் படத்தில் பாலா சாரை சந்தித்தேன். அந்தப்படத்தில் ஒரு பைட் சீன் கொடுத்தார். என்ன இவன் ஒரு டைப்பா இருக்கான் என்று அவரே நான் கடவுள் படத்தில் எனக்கு பெரிய ரோல் கொடுத்தார். எல்லாமே இந்த மொட்டை கெட்டப்பால் வந்தது.

சண்டை கலைஞரான மொட்டை ராஜேந்திரன் நான் கடவுள் படத்தில் பாலாவால் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது காமெடியான வளர்ந்திருக்கிறார்.

rajenthiran

அவர் நடிக்காத படங்களே இல்லை என்கிற அளவிற்கு எல்லா படத்திலும் நடித்து வருகிறார். பெரிய நடிகர்களின் படங்களில் கூட ஒரு சில காட்சியாவது தலைகாட்டி விடுகிறார்.

சில படங்களில் முழுநீள கேரக்டரில் நடித்திருந்தாலும் சோலோ ஹீரோவாக அவர் நடித்து வரும் படம் மோகனா. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கல்யாணி நாயர்.

இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், அஸ்மித்தா, கிங்காங் உள்பட பலர் நடிக்கிறார்கள். எல்.எஸ்.கே.மூவீஸ் தயாரிக்கிறது.

rajenthiran

திருமணமான புதுமணத் தம்பதிகளான மொட்டை ராஜேந்திரனும், கல்யாணி நாயரும் ஒரு வீட்டில் தேனிலவு கொண்டாட செல்கிறார்கள். அந்த வீட்டில் பேய் இருக்கிறது.

அது அவர்களை சேர விடாமல் தடுக்கிறது. அது ஏன்? மொட்டை ராஜேந்திரனும், கல்யாணி நாயரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை.

இந்நிலையில், இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இள வயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் இயற்க்கை முடியுடன் காட்சி தருகிறார் நம்ம மொட்டை ராஜேந்திரன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top