Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் கடவுள் ராஜேந்திரனின் மொட்டை.. கர கர குரல்.. இப்படி ஆனதற்கு காரணம் என்ன தெரியுமா?
நான் கடவுள் ராஜேந்திரன் காமெடியிலும், வில்லன் கேரக்டர்களிலும் தமிழ் திரைப்படத்துறையில் கலக்கிக்கொண்டு இருந்தவர், இவரை ராஜேந்திரன் என்று சொன்னால் தெரியாது மொட்டை ராஜேந்திரன் என்று சொன்னால் தெரியாதவரே இல்லை. எப்பொழுதுமே மொட்டை தலை, கரகரவென்ற தனித்த குரல் இதான் மொட்டை ராஜேந்திரனின் அடையாளம்.
இந்தவ் வருடம் 9 படங்களில் நடித்து முடித்த ராஜேந்திரன், ஆரம்ப காலத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தாலும் அதைத்தொடர்ந்து வில்லன் பாத்திரத்திலும், காமெடி பாத்திரங்களிலும் தற்பொழுது குணச்சித்திரப் பாத்திரங்களிலும் அசத்தி வருகிறார்.
ஒரு காலத்தில் அழகுதான்பா என மொட்டை ராஜேந்திரன் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இவரது குரல், தலை முடி கொட்டியதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபொழுது வில்லன் ஒரு கழிவு வாய்க்காலில் குதிப்பது போன்றதொரு காட்சிக்காக அப்படியே கழிவுநீரில் குதித்துவிட்டாராம். அதன் பின்னர் அவரது உடலிலே தோல்நோய் ஏற்பட்டு அவரது உடலிலிருந்து அத்தனை முடிகளும் கொட்டத்தொடங்கி விட்டனவாம். குரலும் மாறிவிட்டதாம்.
அதன் பின்னர் எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரிசெய்ய முடியவில்லையாம். கால ஓட்டத்தில் மொட்டை ராஜேந்திரன் மாறிய குரலாலும், உருவ தோற்றத்தினாலுமே அவருடைய ட்ரேட்மார்க் ஸ்டைல் ஆகிவிட்டது. அதனால்தான் இப்பொழுது கொஞ்சம் நல்லாவே கல்லா காட்டுகிறார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
