நான் கடவுள், 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பாலா இயக்கத்தில் ஆர்யா, பூஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்களை எழுதியுள்ளார்.

அவரது ஏழாவது உலகம் எனும் புதினத்தைத் தழுவி திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்த்தர் வில்சன் ஒளிப்பதிய, சூப்பர் சுப்பராயன் சண்டையமைத்துள்ளார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

rajenthiran

பாதுகாப்பான வேலை, மாத இறுதியில் சம்பளம், கான்வென்ட் கல்வி கற்கும் வாரிசுகள், தினமும் ‘த ஹிந்து’வின் முகத்தில் விடியும் காலைகள் என எல்லா வகையிலும் ‘செக்யூர்டான’ ஒரு வாழ்க்கையைப் பற்றி யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்.

அந்த வழமையான வாழ்க்கையைத்தான் நிறையப் பேர் வாழ்ந்து கொண்டுமிருக்கிறோம். ஆனால் அழுக்கு, வன்முறை, அடிமைத்தனம், சுரணையை ரத்தம் வழிய வழிய வெட்டியெடுத்துவிட்டு ஜடமாய், மனம், உடல் இரண்டாலும் ஊனப்பட்டு வாழும் ஒரு வாழ்க்கையைப் படமாக எடுக்க துணிச்சல் மட்டுமிருந்தால் போதாது… வாடிய போதெல்லாம் வாடும் நல்ல மனசும் வேண்டும். பாலாவுக்கும், அவரது ராஜவித்வான் இசைஞானிக்கும் இயல்பிலேயே அப்படியொரு மனசு… அதன் விளைவு ‘நான் கடவுள்’!.

Mottai-Rajendran-now-Turned-Romantic

நான் கடவுள் படத்தின் மூலம் பயங்கரமான வில்லனாக களம் இறங்கியவர் மொட்டை ராஜேந்திரன். ஆனால், அதை தொடர்ந்து வெறும் காமெடி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகின்றார்.

அது ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெறுகின்றது, அதன் காரணமாகவே அவருக்கு பட வாய்ப்பு குவிந்து வருகின்றது, ஒரு கட்டத்திற்கு மேல் சென்றால் எந்த ஒரு காமெடி நடிகருக்கும் ஹீரோவாக வேண்டும் என்று ஒரு விருப்பம் இருக்கும்.

mottai rajendran
Actor Rajendran

அந்த வகையில் மொட்டை ராஜேந்திரனும் “மோகனா” என்ற படத்தின் மூலம் சோலோ ஹீரோவாகிவிட்டார், இதில் இவருக்கு ஜோடியாக கல்யாணி நாயர் நடிக்கின்றார்.

தற்போது வரை சூரி மட்டுமே சோலோ ஹீரோவாக எந்த ஒரு படத்திலும் நடிக்காத காமெடியன் என்பது குறிப்பிடத்தக்கது.