நான் கடவுள் பட புகழ் ராஜேந்திரனை மொட்டை ராஜேந்திரன் என்றே அனைவரும் அழைக்கிறார்கள். ஸ்டண்ட் கலைஞராக இருந்து நடிகரான அவருக்கும் ஒரு காலத்தில் தலைநிறைய முடி, மீசை எல்லாம் இருந்துள்ளது.
அவரது குரலும் இனிமையாக இருந்துள்ளது.

ராஜேந்திரன் மலையாள படம் ஒன்றில் ஸ்டண்ட் கலைஞராக இருந்தபோது சண்டைக்காட்சிக்காக தொழிற்சாலை கழிவுகள் அதிக அளவில் கலந்து மாசு அடைந்திருந்த குளத்தில் குதித்தார். இதனால் அலர்ஜி ஏற்பட்டு அவரது முடி கொட்டி, வாய்ஸும் நரநரவென ஆகிவிட்டது.

திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக் மூலம் ரசிகர்களுடன் டச்சில் இருப்பதை பார்த்த ராஜேந்திரன் தற்போது ட்விட்டரில் சேர்ந்துள்ளார்.

நடிகர் அரவிந்த்சாமியுடன் சேர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ராஜேந்திரன். அதில் அவருக்கு தலைமுடியும், மீசையும் உள்ளது.

மொட்டை ராஜேந்திரன் அஜீத் குமாருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.