fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இவர் சொன்ன மொட்டை ராஜேந்திரன் கொலை கூட செய்வாராம்.. யாருப்பா அவரு?

mootai-rajendran-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இவர் சொன்ன மொட்டை ராஜேந்திரன் கொலை கூட செய்வாராம்.. யாருப்பா அவரு?

மொட்டை ராஜேந்திரன் முரட்டுத்தனமான வில்லன், காமெடி கதாபாத்திரம் என்று அனைத்திலும் கைதேர்ந்தவர். ஒரு ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் வெறுப்பாகி விலகி விடலாமா என்று கூட யோசிச்சது உண்டாம். அந்த சூழ்நிலையில் தான் இயக்குனர் பாலாவிடம் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.

தனது படத்தில் ஒரு வில்லன் கதாபாத்திரம் இருக்க நடிப்பீர்களா என்று கேட்ட போது, உடனே சரி என்று ஒப்புக் கொண்டார். அந்த படம் தான் பிதாமகன், அதற்கு பின்னர் மீண்டும் பாலாவின் நான் கடவுள் படத்தில் முக்கியமான வில்லனாக நடித்தார்.

தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார், வில்லனாக மட்டும் தான் நடிக்க தெரியுமா.? என்று பார்த்தால் காமெடி கதாபாத்திரத்திலும் வெளுத்து வாங்கினார். இவரின் அசுர வளர்ச்சியை பார்த்தால் வருடத்திற்கு கிட்டத்தட்ட பத்தில் இருந்து பதினைந்து படங்கள் நடித்துள்ளார்.

பல அவமானங்களை சந்தித்து பின் தான் இதுபோன்ற உச்சத்தை அடைந்து உள்ளாராம், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் பாஸ் என்கிற பாஸ்கரன், ரௌத்திரம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, காஞ்சனா-2, தெறி, தில்லுக்குதுட்டு, இருட்டு அறையில் முரட்டு குத்து என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்தை அடைவதற்கு காரணம் இயக்குனர் பாலா தானம் அவர் எனக்கு கடவுள் போல,அவர் சொன்ன எந்த கதாப்பத்திரம் கூட நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top