Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜென்டில்மேன் படத்தில் நடித்துள்ள மொட்டை ராஜேந்திரன்.. வைரலாகும் புகைப்படம்
1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஜென்டில்மேன்.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்த இந்த படத்தை கேடி குஞ்சுமோன் என்பவர் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து இருந்தார்.
படமும் எதிர்பார்த்ததைப் போலவே நல்ல வசூலை பெற்று கொடுத்தது. கவுண்டமணி, செந்தில் காமெடி மற்றும் ஆக்ஷன் என பக்கா கமர்சியல் படமாக உருவாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது பிரபலமான நடிகராக வலம் வரும் மொட்டை ராஜேந்திரன் தன்னுடைய இளமைக் காலங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக அடியால் வேடங்களில் நடித்துள்ளார். அப்படி ஜென்டில்மேன் படத்தில் அவர் ஒரு சண்டைக் காட்சியில் வரும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

gentle-man-cinemapettai
அறுபது வயதுக்கு மேல்தான் மொட்டை ராஜேந்திரன் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
