அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்த மொட்டை ராஜேந்திரன் அந்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

வேதாளம்’ படத்தில் நடிக்கும்போது அஜித்துடன் செல்பி எடுத்தது, அவர் தோளில் கை போட்டது, கன்னத்தை தடவி கொடுத்தது ஆகியவை எல்லாம் பெரிய விஷயம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர் சிவாவுக்கு எனது நன்றி

அஜித்தின் அடுத்த படத்திலும் எனக்கு ஒரு சின்ன வேடமாவது கொடுக்க வேண்டும் என்று அவரை கேட்டுக்கொள்கிறேன். அஜித், விஜய்யுடன் நடிக்கும்போது மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றது. அவர்களுடைய ரசிகர்களும் என்னுடைய நடிப்பை ரசிக்கின்றனர்’ என்று கூறினார்.