fbpx
Connect with us

Cinemapettai

அம்பியாக இருந்து அந்நியனாக மாறிய ரியோ.. பத்த வச்சுட்டியே மொட்ட.. களைகட்டும் பிக்பாஸ் ப்ரோமோ

Videos | வீடியோக்கள்

அம்பியாக இருந்து அந்நியனாக மாறிய ரியோ.. பத்த வச்சுட்டியே மொட்ட.. களைகட்டும் பிக்பாஸ் ப்ரோமோ

தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமான ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ்.

மேலும் தினசரி புது ப்ரோமோக்களை வெளியிட்டு மக்களை நிகழ்ச்சி பார்ப்பதற்கு தூண்டுகின்றனர் பிக் பாஸ் நிகழ்ச்சிகுழுவினர்.

அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் மூன்றாவது புரோமோ அனல் பறக்கும் விவாதங்களை அடக்கியுள்ளது.

ஏனெனில் பிக் பாஸ் கொடுத்துள்ள எவிக்சன் ப்ராசஸ் டாஸ்க்கில் பேசிய சுரேஷ் சக்ரவர்த்தி, பிக் பாஸ் வீட்டுக்குள் குரூப்பிசம் இருப்பதாக குறிப்பிட்டது அங்குள்ள அனைவரையும் எரிச்சல் ஆக்கியுள்ளது.

இவ்வாறு பேசிவிட்டு வெளியே வந்த சுரேஷ் சக்கரவர்த்தியிடம் பிக்பாஸ் போட்டியாளர்கள் மாறிமாறி கேள்விகளை கேட்டுள்ளனர்.

இந்நிலையில் ரியோ சுரேஷ் சக்கரவர்த்தியிடம், ‘என்னமோ குரூப்பிசம் இருக்கு நீங்களே அதை எப்ப கண்டுபிடிச்சீங்க?’ என்று கேள்வி கேட்டார்.

மேலும்  சனமோ, ‘கேம் இனிமேல்தான் ஆரம்பமாகுது நில்லுங்க’ என்று சுரேசை வழி மறைக்கிறார்.

இவ்வாறு ஒன்னு விட்டா ஒன்னு என்று முதல அனிதா அடுத்து ரியோ இப்போ ஃபுல் ஹவுஸ் மேட்களிடமும் வெறுப்பை சம்பாதித்துள்ளார் சுரேஷ்.

இனிமேல் எப்படி சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் ஹவுஸ்குள்ள சர்வே பண்ண போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

Continue Reading
To Top