Connect with us
Cinemapettai

Cinemapettai

sunny-mia

India | இந்தியா

வீட்டிலேயே முடங்கிய மக்கள் செய்த சாதனை.. பிட்டு படம் பார்ப்பதில் உலக நாடுகளை முந்திய இந்தியா

உலக நாடுகளே கொரானா அச்சத்தில் தவித்து வருகிறது. ஆனால் கொரானா என்ற ஒரு பயமே இல்லாத நாடாக விளங்கி வருகிறது இந்தியா. அதிலும் வடக்கன்ஸ் இருக்காங்களே, ஏதோ வயசு பொண்ணு சடங்கான மாதிரி கொரானாவை அப்படி கொண்டாடுறாங்க.

மக்களிடையே இன்னும் விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் கொரானாவின் வீரியம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்யலாமா எனவும் மத்திய மாநில அரசுகள் யோசனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் இந்தியர்கள் செம்மையான சாதனை ஒன்றை செய்துள்ளனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது வீட்டில் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் பொழுதைப் போக்க இந்த பாழாப்போன டிக் டாக், பழைய படங்கள் என என்ஜாய் செய்து வருகின்றனர்.

ஆனால் நம்மில் பலரும் பிட்டு படம் பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர். அந்த வகையில் தினமும் இளைஞர்கள் இரவு பகல் என பாராமல் இத்தாலி, பிரான்ஸ், யுஎஸ்ஏ போன்ற நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் சென்று வருகிறார்கள்.

தற்போது இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளை விட அதிகமாக பிட்டு படங்களை பார்க்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. அதுவும் குறிப்பிட்ட இந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்திய இளைஞர்களின் சாதனை அளப்பரியதாக உள்ளது.

எதுலயுமே முன்னிலையில் இல்லாத இந்தியாவை இந்த ஒரு விஷயத்திலாவது நம்பர் 1 ஆகி விடுவோம் என நமது இளைஞர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இந்த செய்தியை உலக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவில் காண்டம் விற்பனையின் சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

கல்யாணமும் பண்ணி வைக்கிறது இல்ல, வெளியில போறதுக்கு வழி இல்ல, வேற வழியும் தெரியல, அதனாலதான் நாங்க நாடு நாடாக நாடோடியாக சுத்த வேண்டியதா இருக்கு. போலீஸ் பிடித்து விடக்கூடாது என்பதற்காக VPN போன்ற அரிய வகை ஆப்புகளை பயன்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றனர் நம் இளைஞர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top