ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் என்ற பெருமையை யூசப் பதான் பெற்றுள்ளார்.

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதுவரை நடந்துள்ள போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற சாதனையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் உள்ளார். சிக்ஸர் மன்னனான கெயில் களத்தில் இருந்தால் எதிரணியினர் ஒருவித பீதியுடன் தான் இருப்பது வழக்கம். இவர் 18 முறை ஆட்டநாயகன் விருதை பெற்று அசத்தியுள்ளார்.

யூசப் பதான் அசத்தல்:

அதிகமுறை ஆட்டநாயகனாக திகழ்ந்த இந்தியர்களில் முதலிடம் பிடித்திருப்பவர் யூசப் பதான். முதல் ஐபிஎல் போட்டியில் ராஜாஸ்தான் அணிக்காக விளையாடிய யூசப் பதான் சீசன் முழுவதும் தன் அதிரடியை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.
இவர் அதிக ஆட்டநாயகன் விருதை வென்றவர்கள் பட்டியலில் 2ம் இடம், அதாவது 16 முறை ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

அதிக ஆட்டநாயகர் விருது பட்டியல்:

18 – கிறிஸ் கெயில்
16 – யூசப் பதான்
15 – டிவில்லியர்ஸ்
14 – ரெய்னா, வார்னர்
13 – ரோகித் சர்மா, தோனி

பொதுவாக 4வது அல்லது 5வது இடத்தில் இறங்கும் தோனி, அணி வெற்றியை பறிப்பதில் வல்லவராக உள்ளார். தோல்வியை நோக்கி ஆட்டம் சென்று கொண்டிருந்தாலும், இறுதி வரை போராடி வெற்றியைப் பெறுத்தருவதில் தோனிக்கு நிகர் தோனி தான். இந்த உண்மையை நேற்று ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் நிரூபித்து ரசிகர்களை ஆர்பரிக்கச் செய்தார்.