பீஸ்ட்டை ஓரம் கட்டும் மாதவன்.. சத்தமில்லாமல் பிரம்மாண்ட படத்துடன் மோதல்

பாகுபலி திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பான் இந்தியா திரைப்படம் என்ற சொல் தற்போது பிரபலமாகி வருகிறது. சினிமாவில் வெளியாகும் ஒரு திரைப்படத்தை பான் இந்தியா மூவி என்று சொல்வதற்கு சில சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும்.

அதாவது அந்த திரைப்படம் அதிக பொருட் செலவில் 100 கோடிக்கு மேல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் முன்னணி நடிகர்கள் மற்றும் வரலாற்று சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்லது ஒரு சமூகப் பிரச்சனையை மையப்படுத்தி இருக்க வேண்டும்.

மேலும் இந்தத் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் திரையிடப்படும். பாகுபலி படத்திற்குப் பிறகு நிறைய திரைப்படங்கள் அதேபோல் வெளிவந்துள்ளன. அதில் முக்கியமான திரைப்படம் கே ஜி எஃப். இந்தப் படத்தின் முதல் பாகம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

அதைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. வரும் ஏப்ரல் 14 இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் மாதவன் தயாரித்து, நடித்து வரும் ராக்கெட்டரி  திரைப்படமும் ஏப்ரலில் வெளிவர இருக்கிறது.

100 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை பற்றி எடுக்கப்பட்டுள்ளது. இதில் மாதவனுடன் இணைந்து நடிகை சிம்ரன் நடித்துள்ளார்.

அதே ஏப்ரல் மாதம் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படமும் வெளியாக இருக்கிறது. ஆனால் இந்தப் படம் மற்ற இரண்டு படங்களை போல பான் இந்தியா திரைப்படம் கிடையாது. இதனால் அந்த ரேஸில் இருந்து தற்போது பீஸ்ட் படம் விலகியுள்ளது.

அந்த வகையில் நடிகர் மாதவன் பீஸ்ட் திரைப்படத்தை ஓரங்கட்டி சத்தமில்லாமல் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரித்து வெளியிட இருப்பது அனைவரையும் மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.